
2022-க்கான இந்தியாவின் டாப் 10 கோடீஸ்வரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது ஃபோர்ப்ஸ். இதில் முகேஷ் அம்பானி முதலிடத்திலும், அதானி இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.
அமெரிக்காவின் பிரபல வணிக பத்திரிகை நிறுவனமான ‘ஃபோர்ப்ஸ்’ ஆண்டுதோறும் உலகின் முதல்நிலை கோடீஸ்வரர்கள் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான பட்டியலையும் ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் மொத்தம் 2,668 கோடீஸ்வரர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்களின் மொத்த சொத்து மதிப்பு 12.7 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 219 பில்லியன் அமெரிக்க டாலர்களை தனது சொத்து மதிப்பாக கொண்டுள்ள டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் உலக கோடீஸ்வரர்களில் முதலிடத்தில் உள்ளார். அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் 171 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். உலக அளவில் கோடீஸ்வரர்களை அதிகம் கொண்டுள்ள நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment