
புதுடெல்லி: சர்வதேச சந்தையில் பிரன்ட் கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 104 டாலர் அளவுக்குக் குறைந்தும் கூட இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை. கடந்த 12 நாட்களில் 10 நாட்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் எண்ணெய் விலை 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றம் செய்யப்படுகிறது.
ஆனால், 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்புக்குப் பின்னர் கடந்த நவம்பர் 2021க்குப் பின்னர் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் காணாமல் இருந்தது. சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் கடந்த அக்டோபருக்குப் பின்னர் ஏற்றமில்லாமல் இருந்தது. வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை மட்டுமே ஏற்றம் கண்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment