
கடந்த 2021-ம் ஆண்டில் தங்கத்துக்கான தேவையின் போக்கு குறித்து உலக தங்க கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஒவ்வொரு ஆண்டும் தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. கரோனா போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட 2020-ம் ஆண்டில் தங்கத்தின் ஒட்டுமொத்த தேவை 3,658.8 டன்னாக இருந்தது. 2021-ம்ஆண்டில் தங்கத்தின் சர்வதேச தேவை 4,021.3 டன்னாக உயர்த்தது. இது முந்தைய ஆண்டைவிட 10% அதிகம். மேலும் கடந்த டிசம்பர் நிலவரப்படி இது கடந்த 10 காலாண்டுகளில் இல்லாத உயர்வாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment