
புதுடெல்லி: வருமான வரி விதிப்பு முறையை அரசு கைவிட வேண்டும் என்று மாநிலங்களவை உறுப்பினரான சுப்பிரமணியன் சுவாமி பரிந்துரைத்துள்ளார். இத்தகைய உறுதியான நடவடிக்கை எடுப்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக தனியார் நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் சுப்பிரமணியன் சுவாமி கூறியதாவது: இந்தியப் பொருளாதாரம் பழைய நிலைக்கு மீண்டு வரும் வரையிலாவது வருமான வரி விதிப்பை அரசு கைவிட வேண்டும். எதிர்வரும் பட்ஜெட்டில் இது தொடர்பான அறிவிப்பை மத்திய நிதி அமைச்சர் வெளியிட வேண்டும். இதன்படி ஏப்ரல் 1 முதல் வருமான வரி விதிப்பு கைவிடப்படுவதான அறிவிப்பை அவர் வெளியிடலாம். குறைந்தபட்சம் பொருளாதாரம் பழைய நிலைக்கு மீண்டு வரும் வரையிலாவது இதை அமல்படுத்தலாம். பழைய நிலையை எட்டியபிறகு இதே முறையை அதாவது வருமான வரி விதிப்பில்லாத நிலையை தொடரலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment