
புதுடெல்லி: சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் மீதான இறக்குமதி வரியை 12.5சதவீதமாக மத்திய அரசுக் குறைத்துள்ளது. இதனால் பாமாயிலின் விலை இந்தியாவில் குறையும்எனத் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் உணவு பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில் மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து இறக்கு மதியாகும் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் மீதான இறக்குமதி வரி முன்பு 17.5 சதவீதமாக இருந்தது. தற்போது இது 12.5 சதவீதமாகக் குறைக்கப்பட்டதன் மூலம் சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலின் விலை இந்தியாவில் கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment