
சென்னை: சென்னையில் உள்ள பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நெய்வேலியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் நிதி மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் கடந்த 16-ம் தேதி சோதனை நடத்தினர். நெய்வேலி, சென்னை, கோவை, நீலகிரி போன்ற நகரங்களில் உள்ள 30 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனைகளின்போது, ரகசியமாக பராமரிக்கப்பட்டு வந்த கணக்குகள் அடங்கிய கிளவுட் சர்வர்கள், ரூ.250 கோடிக்கு அசையா சொத்துகள் கண்டறியப்பட்டுள்ளது. இந்த சோதனையின்போது ரூ.12 கோடிக்கும் அதிகமாக ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment