
‘‘மாற்றம் ஒன்றே மாறாதது’’ என்றமுதுமொழிக்கு பொருத்தமாக இருக்கக் கூடியது பன்முகமுதலீட்டுத் திட்டங்களில் மேற்கொள்ளப்படும் முதலீட்டிலிருந்து கிடைக்கும் வருவாயாகத்தான் இருக்கும். இது இடைக்கால முதலீட்டுத் திட்டங்களைக் காட்டிலும் சிறந்ததாக இருப்பதே சிறப்பு. அந்த வகையில் நீண்டகால முதலீட்டுத் திட்டங்களுக்கு சிந்திப்பதைப்போன்று ஓராண்டுக்கான முதலீடுகளில் கிடைக்கும் வருவாயை முன்கூட்டியே திட்டமிடுவது என்பது மிகவும் சவாலான விஷயமாக இருக்காது.
நடைமுறையில் சொத்து முதலீடுகள் மீதான வருமானம் ஒவ்வொரு ஆண்டும் மாறுபட்டு இருந்ததை புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. மேலும் இதில் உள்ள உள்பிரிவு சொத்து முதலீடுகளில் பலவிதமாற்றங்கள் தென்படுகின்றன. இப்போதைய சூழலில் சொத்து முதலீட்டிலான வருமானத்தில் நிலவும் ஸ்திரமற்ற நிலை மற்றும் இவற்றின் மீதான முதலீடுகள் குறித்த விவரங்கள் மிகக் குறைவான அளவில் கிடைப்பது ஆகியவற்றைப் பார்க்கும்போது, நாம் மேற்கொள்ளும் முதலீடுகள் குறித்து விரைவாக முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.அதிலும் குறிப்பாக அதிக லாபம் ஈட்டும்முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்யவேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment