
புதுடெல்லி: பெட்ரோல், டீசல் விலை கடந்த 8 நாட்களில் 7வது முறையாக அதிகரித்துள்ளது. தலைநகர் டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100ஐ கடந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.105.94க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.96க்கும் விற்கப்படுகிறது.
கடந்த ஆண்டு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது. இதையடுத்து, மத்திய அரசு வரி குறைப்பு செய்து பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.5-ம், டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.10-ம் குறைத்தது. கடந்தாண்டு நவ.4-ம் தேதிக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட இந்த விலைக் குறைப்புக்குப் பிறகு, 137 நாட்களாக விலை உயர்த்தப்படவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment