
குடும்பத்தின் அவசரத் தேவைகளுக்காக தங்க நகைகளை அடமானம் வைக்கும்போது, கடன் கிடைத்தால் போதும் என்று மட்டுமே மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், நகைக்கடன் பெறும்போது சில முக்கியமான விஷயங்களை அவசியம் கவனிக்க வேண்டும்.
பாதுகாப்பு முக்கியம்: அடகு வைக்கப்போகும் நிறுவனத்தின் நம்பகத்தன்மை பற்றி முதலில் உறுதி செய்து கொள்ள வேண்டும். வீட்டுக்கடன் வாங்கும்போது வீட்டை அடைமானம் வைத்து வாங்குகிறோம். வீட்டை யாரும் அசைத்து எடுத்துச் சென்ற விட முடியாது. எனவே அடமானமாக கொடுக்கும் பொருளின் பாதுகாப்பு பற்றி கவலையில்லை. ஆனால் தங்கம் அப்படிபட்டது அல்ல.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment