
அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் சாகர். இவர் பங்குச் சந்தையில் முதலீடு செய்து வருகிறார். இந்நிலையில், அவரது பங்குச் சந்தை முதலீட்டுக்கான டிமேட் கணக் கில் கடந்த ஜூலை 26-ம் தேதி ரூ.11,677 கோடி வரவாகி இருந்தது.
இவ்வளவு பெரிய தொகை எப்படி வந்தது, ஏன் வந்தது என்பது குறித்தெல்லாம் அவர் ஆராய்ச்சியில் ஈடுபடவில்லை. உடனடியாக, அதில் ரூ.2 கோடியை எடுத்து பங்குச் சந்தையில் முதலீடு செய்தார். அந்த முதலீடு வழியாக அதே நாளில் ரூ.5 லட்சம் லாபம் ஈட்டினார். இதற்கிடையில், இரவு 8.30 மணி போல அவரது கணக்கிலிருந்த பணத்தை அவரது வங்கி திரும்பப்பெற்றது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இப்படி நிகழ்ந்துவிட்டதாக வங்கி அவருக்கு தெரிவித்தது. கிட்டத்தட்ட எட்டு மணி நேரம் ரூ.11,677 கோடி ராமேஷ் சாகர் கணக்கில் இருந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment