
வாஷிங்டன்: அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் உலகின் முன்னணி செமிகண்டக்டர் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மைக்ரான் டெக்னாலஜிஸ், இந்தியாவில் செமிகண்டக்டர் ஆலை அமைக்க 825 மில்லியன் டாலர் (ரூ.6,700 கோடி) முதலீடு செய்வதாக நேற்று அறிவித்துள்ளது.
மைக்ரான் டெக்னாலஜிஸ் நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்ய இருப்பதாக கடந்த வாரம் தகவல் வெளியானது. அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி மைக்ரான் நிறுவனத்தின் சிஇஓ சஞ்சய் மெஹ்ரோத்ராவை சந்தித்து உரையாடிய நிலையில், இந்தியாவில் முதலீடு செய்வது குறித்து மைக்ரான் நிறுவனம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறி வித்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment