
சென்னை: பிரிட்டிஷ் ஆட்டோமொபைல் பிராண்டான, 99 ஆண்டு பாரம்பரியம் கொண்ட எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம், எம்ஜி ஸ்டூடியோஸ் (MG StudioZ) என்ற தனித்துவமான நிஜ அனுபவத்தை வழங்கும் டிஜிட்டல் மையத்தை நேற்று முன்தினம் தொடங்கியது.
விர்ச்சுவல் ரியாலிட்டி ( விஆர்) / ஆக்மென்ட்டட் ரியாலிட்டி (ஏஆர்) உள்ளிட்ட தொழில் நுட்பங்களை பயன்படுத்தும் இந்த ஸ்டூடியோ எம்ஜி பிராண்டின் அனைத்து கார் ஆர்வலர்களையும் நெருக்கமாக அழைத்துச் செல்லும். எம்ஜி ஸ்டூடியோஸில் டிஜிட்டல் முகப்புத் திரை, வீடியோ வால் கான்ஃபிகரேட்டர், விஆர் / ஏஆர்-வுடன் கூடிய பிரம்மாண்டமான விஷுவலைசர் போன்ற அம்சங்கள் உள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment