
புது டெல்லி: தொடர்ச்சியாக 12-வது நாளாக சரிந்த கிரிப்டோ கரன்சியான பிட்காயின் மதிப்பு. 17,600 அமெரிக்க டாலர்களுக்கு கீழ் சென்ற மதிப்பு.
கிரிப்டோ கரன்சிகளில் மிகவும் பிரபலமான கரன்சியாக உள்ளது பிட்காயின். உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான தொகையை பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்கள் கிரிப்டோ கரன்சி முதலீடு சார்ந்த வணிகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பிட்காயின் மதிப்பு சரிந்துள்ளது. சனிக்கிழமை அன்று சுமார் 15 சதவீதம் வீழ்ச்சி அடைந்து 17,599 டாலர் என்ற மதிப்பை கண்டுள்ளது. இருந்தாலும் ஞாயிறு அன்று சரிவிலிருந்து பிட்காயின் மதிப்பு மீண்டதாக சிங்கப்பூரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment