
சண்டீகர்: எல்இடி விளக்குகள், கிரைண்டர் ஆகியவற்றின் மீதான ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில் மாநிலங்களுக்கான இழப்பீடு வழங்கும் காலத்தை நீட்டிப்பது தொடர்பாக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
ஜிஎஸ்டி கவுன்சிலின் 47-வதுகூட்டம் சண்டீகரில் கடந்த 2 நாட்களாக நடந்தது. இதில், சில பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை உயர்த்த முடிவு செய்து அறிவிக்கப்பட்டது. அதேநேரத்தில் இழப்பீடு வழங்கும் காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்களும் வலியுறுத்தின. ஆனால், அது தொடர்பான முடிவு இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படவில்லை. ஆகஸ்டில் நடக்கவுள்ள அடுத்த கூட்டத்தில் இதுகுறித்த முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment