About

சில்லறை பணவீக்கம் 7 % ஆக அதிகரிப்பு - மத்திய அரசு புள்ளிவிவரத்தில் தகவல்

புதுடெல்லி: நுகர்வோர் விலை குறியீட்டெண் (சிபிஐ) அடிப்படையில் கணக்கிடப்படும் நாட்டின் சில்லறை பண வீக்கம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 7 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதையடுத்து, தொடர்ந்து 8-வது மாதமாக இப்பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் நிர்ணய வரம்பான 6 சதவீதத்துக்கும் அதிகமாகவே உள்ளது கவனிக்கத்தக்கது. உணவுப் பொருட்களின் விலை உயர்வின் காரணமாகவே சில்லறை பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் இந்த அளவுக்கு உயர்ந்துள்ளதாக மத்திய அரசு நேற்று வெளியிட்ட புள்ளி விவரத்தில் தெரிவித்துள்ளது.

சில்லறைப் பணவீக்கம் நடப்பாண்டு ஜூலையில் 6.71 சதவீதமாகவும், கடந்த 2021 ஆகஸ்டில் 5.3 சதவீதமாகவும் காணப்பட்டன. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் உணவுப் பொருள் தொகுப்புக்கான பணவீக்கம் 7.62 சதவீதமாக அதிகரித்தது. இது, முந்தைய ஜூலையில் 6.69 சதவீதமாகவும், கடந்தாண்டு ஆகஸ்டில் 3.11 சதவீதமாகவும் இருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 Reviews: