
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 16) சவரனுக்கு ரூ.360 உயர்ந்து, ரூ.43,400 -க்கு விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் ஏற்ற, இறக்கங்கள் நிலவுகின்றன. முந்தைய வாரங்களில் இறங்குமுகமாக இருந்து வந்த தங்கம் விலை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ. 5,425-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.43,400 -க்கு விற்பனையாகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment