
மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று (புதன்கிழமை) வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 565 புள்ளிகள் உயர்வுடன் 58,465 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 167 புள்ளிகள் உயர்வுடன் 17,208 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகளில் நான்கு நாட்கள் நிலவி வந்த இறங்குமுகம் மாறி புதன்கிழமை வர்த்தகம், ஏற்றத்துடன் தொடங்தியது. காலை 09:50 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 402.83 புள்ளிகள் உயர்வடைந்து 58,303.02 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 104.90 புள்ளிகள் உயர்வடைந்து 17,148.20ஆக இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment