
மும்பை: வாரத்தின் முதல் வர்த்தக தினமான நேற்று பங்குச் சந்தைகளில் கடும்சரிவு காணப்பட்டது. மும்பை மற்றும் தேசியப் பங்குச் சந்தைகள் 3 சதவீதம் அளவில் சரிவைக்கண்டன. சென்செக்ஸ் குறியீட்டெண் 1,747 புள்ளிகள் சரிந்து 56,405-ஆக குறைந்தது. நிஃப்டி குறியீட்டெண் 532 புள்ளிகள் சரிந்து 16,842 ஆக குறைந்தது.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர்ச் சூழல் முற்றி வருகிறது. இந்தப் பதற்றச் சூழல்காரணமாக சர்வதேச பங்குச் சந்தைகளில் நேற்று சரிவு காணப்பட்டது. அது இந்தியப் பங்குச் சந்தைகளிலும் பிரதிபலித்தது. கச்சா எண்ணெய் உற்பத்தியில் ரஷ்யா மிகப் பெரிய நாடாக உள்ளது. இந்நிலையில், தற்போதைய பதற்றச் சூழல் காரணமாக கச்சா எண்ணெய்யின் விலையும் கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவில் கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் நீட்சியாகவும் பங்கு சந்தையில் நேற்று சரிவு காணப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment