
சென்னை: உக்ரைன் விவகாரத்தால் தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது.
அமெரிக்கா தலைமையிலான 'நேட்டோ' நாடுகள் கூட்டமைப்பில் இணைய ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் ஆர்வமாக இருக்கும் சூழலில் அதனை ரஷ்யா எதிர்க்கிறது. உக்ரைனின் போக்கு ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் தனது கட்டுப்பாட்டுக்குள் உள்ள கிரிமியா மீது ஆதிக்கம் செலுத்த உக்ரைன் முயல்வதாகவும் ரஷ்யா குற்றஞ்சாட்டி வருகிறது. இந்நிலையில், எந்த நேரத்திலும் உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா போர் தொடுக்கும் சூழல் உருவாகியுள்ளது. அமெரிக்க, ஜப்பான் எனப் பல்வேறு நாடுகளும் தங்கள் நாட்டு மக்களை உக்ரைனில் இருந்து வெளியேற அறிவுறுத்தியுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment