
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 10) சவரனுக்கு ரூ.280 உயர்ந்து, ரூ.41,520 -க்கு விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் ஏற்ற, இறக்கங்கள் நிலவுகின்றன. கடந்த வாரத்தில் தங்கம் விலை தொடர்ந்து இறங்கி வந்தது. தங்கத்தின் விலை குறைவு இந்த வாரமும் தொடர்ந்தது. புதன்கிழமை அதிரடியாக ரூ.560 குறைந்திருந்தது. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை உயர்ந்திருக்கிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ. 5,190-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ. 280 உயர்ந்து ரூ.41,520 -க்கு விற்பனையாகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment