
மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று (செவ்வாய்க்கிழமை) வர்த்தகம் ஏற்ற இறக்கமின்றி தட்டையாகத் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 40 புள்ளிகள் உயர்வுடன் 58,278 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 17 புள்ளிகள் உயர்வுடன் 17,172 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகளில் இந்த வார இரண்டாம் நாள் வர்த்தகம் தட்டையாகத் தொடங்கி ஏற்ற இறக்கத்தில் பயணித்தது. காலை 09:53 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 46.14 புள்ளிகள் உயர்வடைந்து 58,283.99 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 34.50 புள்ளிகள் உயர்வடைந்து 17,188.80 ஆக இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment