
மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் வியாழக்கிழமை வர்த்தகம் வீழ்ச்சியுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 541 புள்ளிகள் (0.90 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 59,806 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி164 புள்ளிகள் (0.93 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 17,589 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகளில் வியாழக்கிழமை வர்த்தகம் தட்டையாகத் தொடங்கியது. தொடர்ந்து வீழ்ச்சியில் பயணிக்கத் தொடங்கியது. காலை 09:52 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 163.73 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 60,184.36 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 30.30 புள்ளிகள் சரிந்து 17,724.10 ஆக இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment