
புதுடெல்லி: கரோனா பரவலின்போது மத்திய அரசு ஊரடங்கை அறிவித்தது. இதனால் தெரு வியாபாரிகள் வாழ்வாதாரம் இழந்தனர். இதையடுத்து அவர்களின் தொழிலை முன்னேற்ற அவர்களுக்கு சிறு கடன்கள் வழங்கும் நோக்கில் மத்திய அரசு தெரு வியாபாரிகளுக்கான ஆத்ம நிர்பார் நிதி (பிஎம் - எஸ்விஏ நிதி) திட்டத்தை 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் கொண்டு வந்தது.
இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு நேற்றோடு மூன்று ஆண்டு நிறைவடைந்துள்ளது. இந்த மூன்று ஆண்டுகளில் தெரு வியாபாரிகளுக்கு 46 லட்சம் முறை கடன் வழங்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment