
மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் திங்கள்கிழமை சரிவுடன் தொடங்கின. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 80 புள்ளிகள் சரிவடைந்து 66,079 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 27 புள்ளிகள் சரிந்து 19,618 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் சரிவுடனேயே தொடங்கியது.என்றாலும் வர்த்தக நேரத்தின் போது சீரடையத் தொடங்கியது. காலை 10:17 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 78.42 புள்ளிகள் உயர்வடைந்து 66,238.62 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 11.60 புள்ளிகள் உயர்ந்து 19,657.65 ஆக இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment