
புதுடெல்லி: தேர்தலுக்கு முன்பாக சீர்திருத்தங்கள் செய்ய வேண்டியிருக்கும்போது பட்ஜெட்டில் சலுகைகளை எதிர்பார்ப்பது என்பது ஒரு பன்றியை பாடச் சொல்லிக் கேட்பதைப் போன்றது. அது உங்களது நேரத்தை மட்டும் வீணடிக்காது பன்றியையும் கலவரப்படுத்தும். (மேலே சொன்ன வாசகம் மார்க்ட்வைனின் மாற்றியமைக்கப்பட்ட கூற்று). 5 மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையிலும், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றுள்ள சூழலில் இந்த பட்ஜெட் மக்கள் விரும்பும் வெகுஜன பட்ஜெட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவ்விதம் எதுவுமே பட்ஜெட்டில் இடம் பெறாதது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளது.
ஆனால் இலவசங்களுக்குப் பதிலாக கரோனா பெருந்தொற்றிலிருந்து பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் மீட்பதற்கு வசதியாக நீண்ட கால அடிப்படையிலான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக வேலை வாய்ப்பு உருவாக்கம், சீர்திருத்தங்கள் மற்றும் கடந்த பட்ஜெட் டிலிருந்து கற்றுக் கொண்ட சிறந்த திட்டங்களை தொடர்வது உள்ளிட்டவை இதில் இடம்பெற்றுள்ளன. பட்ஜெட் தினத்தன்று பெரும்பாலான பாஜக ஆதரவாளர்கள் மிகவும் முட்டாள் தனமான முடிவுக்கு வந்துவிட்டனர். குறிப்பாக உத்தரபிரதேச பாஜக அரசியல் வாதிகள் தங்களுக்கு நெருக்கமானவர்களிடம் பேசுகையில், தங்களது அரசியல் வாழ்க்கை இத்துடன் முடிந்துவிட்ட தாகவே கூறியுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment