
அகமதாபாத்: உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு இடையிலான போர் காரணமாக இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள லட்சக்கணக்கான வைரத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் ஊரக பகுதியில் வசிக்கும் மக்கள் அதிகளவில் போர் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய நாட்டிலிருந்து சிறிய அளவிலான வைரங்கள் குஜராத் மாநிலத்திற்கு இறக்குமதி செய்து, அவற்றை மெருகூட்டும் பணிகள் செய்யப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது போர் காரணமாக வழக்கமாக இறக்குமதி செய்யப்படும் சீரியல் அளவிலான வைரங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதனால் ஆப்பிரிக்கா மற்றும் இன்னும் பிற நாடுகளில் இருந்து வைரத்தை அதிக விலைக்கு வாங்கும் நிலை உருவாகி உள்ளதாம். இதனால் இப்போது இந்த பணியை மேற்கொண்டு வரும் கூடங்கள் தங்கள் வேலை நேரத்தை குறைத்துக் கொண்டுள்ளதாம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment