
சென்னை: தங்கம் விலை ஒரே நாளில் அதிரடியாக பவுனுக்கு ரூ.560 குறைந்து ரூ.41,320-க்கு விற்பனையாகிறது. இதனால், தங்கம் வாங்குவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. கடந்த மாதம் 2-ம் தேதி ஒரு பவுன் ரூ.44,040-க்கு புதிய உச்சத்தை அடைந்தது. பின்னர் விலை குறைந்து மார்ச் 2-ம் தேதி ரூ.41,944-க்கு விற்பனையானது. கடந்த 2 நாட்களாக தங்கம் விலை குறைந்து வருகிறது. குறிப்பாக, நேற்று ஒரே நாளில் தங்கம் விலை அதிரடியாக குறைந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment