
புதுடெல்லி: நிதி மோசடி தடுப்பு சட்ட வரம்புக்குள், ஜிஎஸ்டி நெட்வொர்க்கை சேர்க்க எதிர்க்கட்சிகள் ஆளும்மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் 66-வது பிரிவின் கீழ் மத்திய அரசு சில மாற்றங்களை செய்தது. அதன்படி கடந்தாண்டு நவம்பர் மாதம் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), தீவிர மோசடி புலனாய்வுபிரிவு, மத்திய ஊழல் கண்காணிப்புஆணையம் உட்பட மத்திய அரசின் 15 விசாரணை அமைப்புகள் நிதிமோசடி தடுப்பு சட்ட வரம்புக்குள் சேர்க்கப்பட்டன. இதன் மூலம் இந்தஅமைப்புகள், அமலாக்கத் துறையிடம் தகவல்களை பகிர்ந்து கொள்ள முடியும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment