
புதுடெல்லி: பியூச்சர் குழும நிறுவனங்களை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்வது தொடர்பாக சிங்கப்பூர் சர்வதேச தீர்ப்பாயத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கிற்கு டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்தத் தடையை விலக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் அமேசான் நிறுவனம் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று பியூச்சர் குழுமத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பியூச்சர் குழுமத்தின் சங்கிலித் தொடர் நிறுவனங்களான பிக்பஜார் உள்ளிட்ட நிறுவனங்களை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு ரூ. 24,500 கோடிக்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது. ஒருதலைப் பட்சமான இம்முடிவை எதிர்த்து ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் வழக்கு தொடர்ந்தது. இந்த முடிவு ஏக போக வர்த்தகத்துக்கு வழிவகுக்கும் என்று நீதிமன்றத்தில் அமேசான் தெரிவித்திருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment