
மத்தியில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஆட்சியின்போதுதான் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டது என்று மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டினார்.
மக்களவையில் சிவசேனை உறுப்பினர் அரவிந்த் சாவந்த் கூறிய புகாருக்கு விளக்கம் அளித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மேலும் கூறியதாவது: பொதுத்துறை நிறுவனங்களான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்), மகாநகர் டெலிபோன் நிகாம் லிமிடெட் (எம்டிஎன்எல்) ஆகிய இரு நிறுவனங்களும் மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டன. வோடபோன் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் அரசு செயல்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment