
புதுடெல்லி: ரிசர்வ் வங்கியின் முழுக் கவனமும் நாட்டின் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில்தான் இருக்கிறது என்றும் அதே சமயம் வளர்ச்சியைப் பாதிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள மாட்டோம் என்றும் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பணவீக்கம் கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவில் உச்சம் தொட்டுள்ளது. மக்கள் பயன்பாட்டுக்கான பொருட்களின் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. நடப்பு நிதி பணவீக்கத்தை 4 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி இலக்கு நிர்ணயித்து இருந்தது. ஆனால், தற்போது பணவீக்கம் 7.79 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது ஆர்பிஐ நிர்ணயித்த இலக்கை விட இரு மடங்கு அதிகமாகும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment