
புதுடெல்லி: பெட்ரோல், டீசல் மீதான கலால்வரியை மத்திய அரசு குறைத்துள் ளது. இதனால் ஏற்படும் இழப்பு முழுவதையும் மத்திய அரசே ஏற்கிறது. மாநில அரசுகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.8-ம், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.6-ம் குறைக்கப்படும் என்று மத்திய அரசு நேற்று முன்தினம் அறிவித்தது. இந்த வரிகுறைப்பு நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதனால் மாநில அரசுகளுக்கு வரிஇழப்பு ஏற்படும் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதற்கு விளக்கம் அளித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது: மக்கள் நலனை கருத்தில் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைக்க முடிவு செய்தார். இதன்படி கடந்த 21-ம் தேதி பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைக்கப்பட்டது. ஆனால் சிலர் எதிர்மறையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அவர்களோடு சில அடிப்படை உண்மைகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அடிப்படை கலால் வரி (பிஇடி), சிறப்பு கூடுதல் கலால் வரி (எஸ்ஏஇடி), சாலை மற்றும் உள்கட்டமைப்பு செஸ் வரி (ஆர்ஐசி), வேளாண்மை மற்றும் உள்கட்டமைப்பு செஸ் வரி (ஏஐடிசி) ஆகியவை இணைந்து பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை நிர்ணயிக்கின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment