
கோவை: இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்காக அக்டோபர் 1-ல் தொடங்கி 23-ம் தேதி வரை கோவையில் இருந்து ஷார்ஜா மற்றும் சிங்கப்பூருக்கு 20 டன் எடையிலான இனிப்பு உள்ளிட்ட உணவு வகைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
கோவை விமானநிலையத்தில் இருந்து ஷார்ஜாவுக்கு வாரத்தில் ஐந்து நாட்களும், சிங்கப்பூருக்கு வாரத்தில் அனைத்து நாட்களும் விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு, காரம் உள்ளிட்ட பல உணவு வகைகளுக்கு வெளிநாட்டில் வாழும் இந்தியர்களிடையே அதிக வரவேற்பு இருப்பது வழக்கம். இதனால் அதிக எடையிலான உணவு வகைகள் ஏற்றுமதி செய்யப்படும். இந்த ஆண்டு 23 நாட்களில் 20 டன் எடையிலான உணவு வகைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment