
புதுடெல்லி: மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு தீபாவளி பரிசாக அகவிலை நிவாரண படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இது குறித்து ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான நலத்துறை தெரிவித்துள்ளதாவது: மத்திய அரசு பணியாளர்களின் அகவிலைப் படி (டிஏ) மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரண (டிஆர்) உயர்வுக்கு மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி, மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு தீபாவளி பரிசாக அவர்களுக்கான அகவிலை நிவாரணம் 4 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கான டிஆர் 34 சதவீதத்திலிருந்து 38 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதிகரிக்கப்பட்ட இந்த அகவிலை நிவாரணம் 2022 ஜூலை 1-லிருந்து கணக்கிட்டு வழங்கப்படும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment