
புதுடெல்லி: டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர்ச்சியாக வீழ்ச்சி அடைந்து வருகிறது. நேற்றைய அந்நிய செலாவணி வர்த்தக தொடக்கத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.83.12 ஆக சரிந்தது. இது வரலாறு காணாத சரிவு ஆகும். எனினும், வர்த்தக முடிவில் ரூபாய் மதிப்பு மீண்டு ரூ.82.71 ஆக நிலைபெற்றது.
கடந்த பிப்ரவரி மாதம் ரஷ்யா–உக்ரைன் இடையில் போர் தொடங்கியது. போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது. இதன் தொடர்ச்சியாக சர்வதேச அளவில் பணவீக்கம் தீவிரமடைந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment