
மும்பை: மும்பை பங்குச்சந்தையில் செவ்வாய்கிழமை வர்த்தகம் முடிவைடையும்போது சென்செக்ஸ் 288 புள்ளிகள் (0.48 சதவீதம்) சரிந்து 59,544 ஆக இருந்தது. அதேநேரத்தில், தேசியப் பங்குச்சந்தையில் நிஃப்டி 74 புள்ளிகள் (0.05 சதவீதம்) சரிந்து 17,656 ஆக இருந்தது.
பங்குச்சந்தையில் இன்று வர்த்தகம் ஏற்றத்துடனேயே தொடங்கியது. வர்த்தக நேர தொடக்கத்தில் 150 புள்ளிகள் ஏற்றத்தில் இருந்த சந்தை, பின்னர் ஏற்ற இறக்குத்துடனேயே காணப்பட்டது. 9.34 மணியளவில் சென்செக்ஸ் 31.05 புள்ளிகள் உயர்வுடன் 59862.71 ஆக இருந்தது. அதேவேளையில் தேசிய பங்குச்சந்தையில் 227.10 புள்ளிகள் உயர்ந்து 17803.40 ஆக நிலைகொண்டிருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment