
மும்பை: பொதுத்துறை நிறுவனமான ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (எல்ஐசி) மிக அதிக அளவில் பங்கு வெளியீட்டில் ஈடுபட்டுள்ளது.
பங்கு வெளியீடு மூலம் ரூ.21 ஆயிரம் கோடி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் 98 சதவீத அளவுக்கு பங்குகளுக்கு முன்பதிவு வந்துள்ளது. பங்குச் சந்தை விடுமுறை நாளான சனிக்கிழமையும் கூடுதலாக எல்ஐசி பங்கு முதலீட்டுக்கு விண்ணப்பிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்நிறுவன பங்குகளில் இம்மாதம் 9-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பங்குகள் வரும் 17-ம் தேதி பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment