
புதுடெல்லி: பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் வர்த்தக பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டரின் விலையை குறைத்துள்ளன. இந்த விலை குறைப்பு சனிக்கிழமை (அக்.1) முதல் உடனடியாக அமலுக்கு வருகிறது.
இந்திய எண்ணெய் நிறுவணங்களின் புதிய விலை நிர்ணயத்தின் படி, 19 கிலோ எடை கொண்ட வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர்களின் விலை ரூ. 36 வரை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, தேசிய தலைநகர் டெல்லியில், சிலிண்டரின் விலை ரூ.25.50 காசுகள் குறைக்கப்பட்டு, ரூ.1,859.50 வாக விற்கப்படும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment