
புதுடெல்லி: ரிலையன்ஸ் நிறுவனம் கடந்த நிதி ஆண்டில் ரூ.7.92 லட்சம் கோடி (102 பில்லியன் டாலர்) வருவாய் ஈட்டியுள்ளது. அந்த வகையில் ஒரே ஆண்டில் 100 பில்லியன் டாலருக்கு மேல் வருவாய் ஈட்டிய முதல் இந்திய நிறுவனம் என்ற அடையாளம் ரிலையன்ஸுக்கு கிடைத்துள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், மார்ச் மாதத்துடன் முடிவடைந்த சென்ற நிதி ஆண்டின் நான்காம் காலாண்டு அறிக்கையை வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதில் ரிலையன்ஸின் நிகர லாபம் 22.5 சதவீதம் உயர்ந்து ரூ.16,203 கோடியாக உள்ளது. 2020-21-ம் நிதி ஆண்டில் அதன் நிகர லாபம் ரூ.13,227 கோடியாக இருந்தது. நான்காம் காலாண்டில் அதன் வருவாய் 35 சதவீதம் உயர்ந்து ரூ.2.32 லட்சம் கோடியானது
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment