
பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுடன் 75-வது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, அந்நிறுவனத்தின் கோவை அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
பிஎஸ்என்எல் நிறுவனம் ஃபிரீடம் 75 பாரத் ஃபைபர் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, மாதம் ரூ.599 மதிப்புள்ள புதிய எஃப்டிடிஎச் இணைப்பு 60 எம்பிபிஎஸ் வேகத்தில் 75 நாட்களுக்கு ரூ.275-க்கு வழங்கப்படுகிறது. மாதம் ரூ.999 மதிப்புள்ள ஓடிடி உடன் எஃப்டிடிஎச் திட்டம் 75 நாட்களுக்கு 150 எம்பிபிஎஸ் வேகத்தில் ரூ.775-க்கு வழங்கப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment