
மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்றும் (செவ்வாய்க்கிழமை) வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. வர்த்தக நேரத்தின் தொடக்கத்தில் சென்செக்ஸ் 250 புள்ளிகள் உயர்ந்து 60,852 ஆக இருந்தது. அதேவேளையில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 50 புள்ளிகள் உயர்வு அடைந்து 18,050 ஆக இருந்தது.
கடந்த வாரத்தில் கடுமையான வீழ்ச்சியிலிருந்து மீண்ட இந்திய பங்குச்சந்தைகள் நேற்றைய ஏற்றத்தை இன்றும் தொடர்ந்தன. காலை 09:22 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 400.18 புள்ளிகள் உயர்வடைந்து 60,966.60 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 75.20 புள்ளிகள் உயர்வடைந்து 18,089.80 ஆக இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment