
சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.464 குறைந்து ரூ.40,528-க்கு விற்பனையானது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை உயர்ந்து, ஒரு பவுன் 41 ஆயிரத்தை நெருங்கியது. இந்நிலையில், தங்கம் விலை நேற்று குறைந்தது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.58 குறைந்து ரூ.5,066-க்கும், பவுனுக்கு ரூ.464 குறைந்து ரூ.40,528-க்கும் விற்பனையானது. இதேபோல, 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.43,744 ஆக இருந்தது. ஒரு கிராம் வெள்ளி நேற்று ரூ.73.70க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.73,700 ஆக இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment