
மும்பை: மும்பை பங்குச்சந்தையில் வியாழக்கிழமை வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. வர்த்தக நேரத்தின் தொடக்கத்தில் சென்செக்ஸ் 322 புள்ளிகள் வரை உயர்ந்து 61,389 ஆக இருந்தது. அதேவேளையில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 83 புள்ளிகள் உயர்ந்து 18,300 ஆக இருந்தது.
ஏற்றத்துடன் வர்த்தகம் தொடங்கிய போதிலும் விரைவில் சரிவை நோக்கி சென்றது. காலை 09:49 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 176.55 புள்ளிகள் உயர்வுடன் 61,243.79 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 12.05 புள்ளிகள் உயர்வுடன் 18,211.15 ஆக இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment