
புதுடெல்லி: நடப்பு நிதி ஆண்டில் இதுவரையில் ரூ.5.74 லட்சம் கோடி நேரடி வரி வசூலாகியுள்ளது. சென்ற ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இது 19.5 சதவீதம் அதிகம் ஆகும்.
நடப்பு நிதி ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஜூலை11-ம் தேதி வரையில் வசூலாகியுள்ள நேரடி வரி குறித்த விவரங்களை வருமான வரித் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, நடப்பு நிதி ஆண்டில் இதுவரையில் ரூ.5.74 லட்சம்கோடி நிகர நேரடி வரி வசூலாகியுள்ளது. இதில், தனிநபர் வருமான வரி வசூல் ரூ.3.64 லட்சம் கோடியாகவும், கார்ப்பரேட் வரி வசூல் ரூ.2.1 லட்சம் கோடியாகவும் உள்ளது. சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் தனிநபர் வருமான வரி வசூல் 24 சதவீதமும், கார்ப்பரேட் வரி வசூல் 12.5 சதவீதமும் உயர்ந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment