
மும்பை: உலகின் செலவு மிகுந்த நகரங்களின் பட்டியலை மெர்சர் நிதி ஆலோசனை நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவில் செலவு மிகுந்த நகரங்களின் பட்டியலில் மும்பை முதலிடத்தில் உள்ளது. இந்தப் பட்டியல் சம்பந்தப்பட்ட நகரங்களில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை செலவினம் அடிப்படையில் வெளியாகி உள்ளது.
பணவீக்கம், சர்வதேச பொருளாதார சூழல், உள்நாட்டு வரி, போக்குவரத்து, பொருட்களின் விலை போன்றவை செலவு கூடுவதற்கு முக்கிய காரணிகளாக சொல்லப்படுகிறது. அந்த வகையில் சுமார் 226 நகரங்களை இதில் மெர்சர் பட்டியலிட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment