
நாமக்கல்: மஸ்கட், ஓமனில் கோடை காலம் நீடிப்பதால், அந்நாடுகளுக்கு நாமக்கல்லில் இருந்து முட்டை ஏற்றுமதி செய்யப்படுவது சரிவடைந்துள்ளதாக, முட்டை ஏற்றுமதியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் 1,000க்கும் அதிகமான கோழிப்பண்ணைகள் உள்ளன. இவை மூலம் நாள்தோறும் 4 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில், 70 லட்சம் முட்டைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. குறிப்பாக, சவுதி அரேபியா, ஈரான், ஈராக், ஓமன், பஹ்ரைன், மஸ்கட் போன்ற ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் ஆப்ரிக்க நாடுகளுக்கும் முட்டை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மஸ்கட் உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகளில் கோடை காலம் நிலவுகிறது. எனவே, அந்த நாடுகளில் முட்டை நுகர்வு கணிசமாக குறைந்துள்ளது. இதனால் அந்நாடுகளுக்கான முட்டை ஏற்றுமதியில் சரிவு ஏற்பட்டுள்ளதாக முட்டை ஏற்றுமதியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment