
புதுடெல்லி: இந்தியாவில் ஜூலை மாத ஜிஎஸ்டியாக ரூ. 1,48,995 கோடி வசூலாகியுள்ளது. நாட்டில் ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் இரண்டாவது முறையாக இவ்வளவு அதிகபட்ச வருவாய் கிடைத்துள்ளது.
2022 ஜூலை மாதத்தில் மொத்தம் ரூ. 1,48,995 கோடி ஜிஎஸ்டி வசூல் செய்யப்பட்டுள்ளது. இதில் சிஜிஎஸ்டி ரூ. 25,751 கோடி, எஸ் ஜிஎஸ்டி ரூ. 32,807 கோடி, ஐஜிஎஸ்டி ரூ. 79,518 கோடி (சரக்குகளின் இறக்குமதி மீதான ரூ. 41,420 கோடி உள்பட). செஸ்வரி ரூ. 10,920 கோடி (சரக்குகளின் இறக்குமதி மீதான ரூ. 995 கோடி உள்பட). ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டபின் 2-வது முறையாக இவ்வளவு அதிகபட்ச வருவாய் கிடைத்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment