
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று புதன்கிழமை (மார்ச் 1) சவரனுக்கு ரூ.224 உயர்ந்து, ரூ.41,880-க்கு விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் ஏற்ற, இறக்கங்கள் நிலவுகின்றன. கடந்த இரண்டு வாரங்களாக தங்கம் விலை தொடர்ந்து இறங்கி வந்தது. இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.28 உயர்ந்து, ரூ.5,235-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.224 உயர்ந்து, ரூ.41,880-க்கு விற்பனையாகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment