
புதுடெல்லி: ஆதாருடன் இணைக்கப்படாவிட் டால் ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து பான் கார்டு செயலற்றதாகிவிடும் என்று மத்திய நேரடிவரிகள் வாரியம் (சிபிடிடி) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சிபிடிடி வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது: வருமான வரி சட்டம் 1961-ன் கீழ் பான் கார்டு வைத்திருப்பவர்கள் அனைவரும் வரும் மார்ச் 31-ம் தேதிக்கு முன்னதாக தங்களது பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது கட்டாயம். அப்படி இணைக்காதவர்களின் பான் கார்டுகள் அனைத்தும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் செயலற்றதாக மாறிவிடும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment