
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று புதன்கிழமை (பிப்.22) எந்தவித மாற்றமும் இல்லாமல் சவரனுக்கு ரூ.42,200-க்கு விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் ஏற்ற, இறக்கங்கள் நிலவுகின்றன. கடந்த வாரத்தில் தொடர்ந்து இறங்கி வந்த தங்கம் விலை சனிக்கிழமை உயர்ந்தது. இந்நிலையில், தங்கம் விலை நேற்று சற்று குறைந்திருந்தது. இன்று விலையில் எந்த மாற்றமுமின்றி நேற்றைய விலையிலேயே விற்பனையாகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.5,275-க்கு விற்பனையாகிறது. சவரன் ரூ.42,200-க்கு விற்பனையாகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment